அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்
அகிலத்திற்கு அருட்கொடை அல்குர்ஆன்
அருள்நேசர் ஜிப்ரீல்[அலை]அறிவித்தது அல்குர்ஆன்
அண்ணல் நபி ஸல் அமுதவாயால் பிறந்தது அல்குர்ஆன்
அன்பின் மூலம் அல்குர்ஆன்
அரவணைக்கும் ஆயிரம் தாயன்பு அல்குர்ஆன்
அறிவின் அருட்சுரங்கம் அல்குர்ஆன்
அறிவாளிகளின் பல்கலைக்கழகம் அல்குர்ஆன்
கண்டுபிடிப்புகளின் கருவூலம் அல்குர்ஆன்
விஞ்ஞானத்தின் வழிகாட்டி அல்குர்ஆன்
மெஞ்ஞானத்தின் இரகசியங்கள் அல்குர்ஆன்
மெய்யடியார்களின் பேரொளி அல்குர்ஆன்
நபிமார்களின் வரலாறு அல்குர்ஆன்
நபித்தோழர்களின் இதயப்பதிவு அல்குர்ஆன்
வரலாறுகளின் விளக்கங்கள் அல்குர்ஆன்
வாழ்ந்து சென்றவர்களின் படிப்பினைகள் அல்குர்ஆன்
உலமாக்களின் அமானத்து அல்குர்ஆன்
ஹாபிள்களின் இதயச்சொத்து அல்குர்ஆன்
ஆலிம்களின் இதய சிம்மாசனம் அல்குர்ஆன்
மாணவர்களின் மறுமைகல்வி அல்குர்ஆன்
எழுத்துக்கள் மாறாதது அல்குர்ஆன்
அதன் எண்ணிக்கையிலும் மாறாதது அல்குர்ஆன்
இடை கருத்து புகாதது அல்குர்ஆன்
இறைவனே பாதுகாப்பது அல்குர்ஆன்
ஓதுபவர்க்கு வெளிச்சம் அல்குர்ஆன்
ஓதுமிடத்தில் ஒளியை வரவழைக்கிறது அல்குர்ஆன்
காலங்களை மறக்க செய்கிறது அல்குர்ஆன்
காலங்களை கனிய செய்கிறது அல்குர்ஆன்
நேரங்களை நிம்மதியாக்குகிறது அல்குர்ஆன்
நிம்மதியை அழைத்து வருகிறது அல்குர்ஆன்
மனனம் செய்பவருக்கு இலகுவானது அல்குர்ஆன்
மழலையர் நெஞ்சிலும் அழகாய் பதிவது அல்குர்ஆன்
ஈமானின் ஆணிவேர் அல்குர்ஆன்
ஹிதாயத்தின் அகன்ற கிளைகள் அல்குர்ஆன்
மூன்று வேதங்களின் நிறைவு அல்குர்ஆன்
நான்கு வேதங்களின் சாரம் அல்குர்ஆன்
தேடுவோருக்கு தெவிட்டாத தேனூற்று அல்குர்ஆன்
தெரிந்தவர்க்கு தேடிக்கண்ட நிம்மதி அல்குர்ஆன்
இணைவைப்போருக்கு எச்சரிக்கை மணி அல்குர்ஆன்
குழப்பவாதிகளுக்கு சட்டை அடி அல்குர்ஆன்
எல்லா நோய்களுக்கும் அருமருந்து அல்குர்ஆன்
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்ப்பு சொல்வது
அல்குர்ஆன்
சூனியத்தை உடைத்தெறிவது அல்குர்ஆன்
சூழ்ச்சியாலர்களை மிரள வைக்கிறது அல்குர்ஆன்
உலகமுஸ்லிம்களின் தொளிகை மொழி அல்குர்ஆன்
உலக பள்ளிகளின் அழைப்பு மொழி அல்குர்ஆன்
மனித நேயத்தை பறைசாற்றுகிறது அல்குர்ஆன்
நிறமொழி பேதங்களை சமத்துவப்படுத்துகிறது
அல்குர்ஆன்
பெண்ணின் பிறப்பை பெருமைபடுத்துகிறது அல்குர்ஆன்
பெண்ணுக்கு சொத்துரிமையில் பங்கு வழங்குகிறது
அல்குர்ஆன்
மகர் தந்து பெண்ணை மணமுடிக்க சொல்கிறது
அல்குர்ஆன்
மறுமை வாழ்க்கையிலும் பெண்ணை அரவணைக்கிறது
அல்குர்ஆன்
அனாதை உரிமைகளை பாதுகாக்கிறது அல்குர்ஆன்
அனாதை வாழ்க்கைக்கு பொறுப்பேற்கிறது அல்குர்ஆன்
அநீதி இழைக்கப்பட்டவனின் துஆவை ஏற்கிறது
அல்குர்ஆன்
பலதாரமணத்தை அனுமதி தருகிறது அல்குர்ஆன்
ஒருதார மணத்தின் நேர்மையை சொல்கிறது அல்குர்ஆன்
திருமண உறவு முறைகளை தெளிவாய் சொல்கிறது
அல்குர்ஆன்
அது அல்லாத உறவுகளின் கெடுதிகளை சொல்கிறது
அல்குர்ஆன்
மனிதனை தொடரும் மலக்குகளை சொல்கிறது அல்குர்ஆன்
மனிதனுக்கு மன்னுசல்வா உணவளித்து உயர்வை
சொல்கிறது அல்குர்ஆன்
தந்தையின் முதுகுத்தண்டில் மனிதன் வைக்கப்பட்ட
நிலையை சொல்கிறது அல்குர்ஆன்
தாயின் கருவறையில் மனிதன் வளரும்
நிலையைச்சொல்கிறது அல்குர்ஆன்
இருகடல் சங்கமத்தின் தடுப்பை சொல்கிறது
அல்குர்ஆன்
இருகடல் சுவைநீரின் தன்மையை சொல்கிறது
அல்குர்ஆன்
கடல்கடந்து மூசா அலை கரைசேர்ந்ததை சொல்கிறது
அல்குர்ஆன்
கடல்மூடி கொடியவன் பிர்அவ்ன் அழிந்ததை சொல்கிறது
அல்குர்ஆன்
யூசுப்[அலை] நீண்ட வரலாற்றை சொல்கிறது அல்குர்ஆன்
ஈஸா[அலை] உயர்த்தப்பட்ட உண்மையை சொல்கிறது
அல்குர்ஆன்
மூஸா நபியிடம் இறைவனே பேசியதை சொல்கிறது
அல்குர்ஆன்
சுலைமான்[அலை] பறவைகளின் பாஷையை பேசி வாழ்ந்த
ஆட்சியை சொல்கிறது அல்குர்ஆன்
சுலைமான் அலை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புத
அரசாட்சியை சொல்கிறது அல்குர்ஆன்
கண் இமைக்கும் நேரத்தில் பல்கிஸ் ராணியின்
சிம்மாசனம் கொண்டு வரப்பட்ட அற்புதத்தை சொல்கிறது அல்குர்ஆன்
இப்ராஹீம் அலை தியாக வரலாற்றை விளக்குகிறது
அல்குர்ஆன்
நமது நாயகம் மீது இறைவன் கூறும் சலவாத்தை
சொல்கிறது அல்குர்ஆன்
நமது நாயகம் மிஹ்ராஜ் பயணத்தை சொல்கிறது
அல்குர்ஆன்
பாதுகாக்கப்பட்ட கொடியோன் பிரௌன் உடலை
அறிவிக்கிறது அல்குர்ஆன்
தனிமையில் இருக்கும் பிறபெண்ணுடன் பேசுவதை
தடுக்கிறது அல்குர்ஆன்
தலை மறைத்து வெளியில் செல்லும்படி பெண்களுக்கு
கட்டளை இடுகிறது அல்குர்ஆன்
கணவனின் கட்டளைக்கு அடிபணிய சொல்கிறது
அல்குர்ஆன்
தாய் தந்தையரை பேணுவது சுவர்க்கம் என்கிறது
அல்குர்ஆன்
தாய் தந்தை வெறுப்பில் நரகம் என்கிறது
அல்குர்ஆன்
சுவர்க்கத்தின் சுகங்களை சொல்லி நம்மை
ஈர்க்கிறது அல்குர்ஆன்
நரகத்தின் வேதனைகளை காட்டி எச்சரிக்கிறது
அல்குர்ஆன்
ஒழுவின் பர்ளுகளை சொல்லி தருகிறது அல்குர்ஆன்
தயம்மத்தின் சலுகைகளை அறிவிக்கிறது அல்குர்ஆன்
தொழுகையின் நேரங்களையும் அறிவிக்கிறது
அல்குர்ஆன்
தொழக்கூடாத நேரங்களையும் எச்சரிக்கிறது
அல்குர்ஆன்
ஐந்து நேர தொழுகையை அவசியமாக்குகிறது அல்குர்ஆன்
அஸ்ரு நேரத்தொழுகையின் முக்கியத்துவத்தை
சொல்கிறது அல்குர்ஆன்
கஸ்ரு தொழுகையின் சலுகையினை விளக்குகிறது
அல்குர்ஆன்
நடு இரவு தொழுகையின் உயர்வை சொல்கிறது
அல்குர்ஆன்
அல்லாஹ்வை பற்றி பிடிக்கும் அற்புத கயிறு
அல்குர்ஆன்
அல்லாஹ்விடமே பேசுகின்ற அரியவாய்ப்பு அல்குர்ஆன்
அடியார்கள் ஓத அல்லாஹ் கேட்பது அல்குர்ஆன்
மறுமையில் அல்லாஹ் ஓத அடியார்கள் கேட்பது
அல்குர்ஆன்
விடிவுகளை சொல்லித்தரும் தொடர்கவிதை அல்குர்ஆன்
தோண்ட தோண்ட தொடர் பொக்கிஷம் அல்குர்ஆன்
படிக்க படிக்க புது புது விளக்கங்கள் அல்குர்ஆன்
இறைபாக்கியம் கிட்டாதோருக்கு புரியாத புதிர்
அல்குர்ஆன்
இறைவன் நாடிய விஷயங்களை என்னை சொல்ல வைக்கிறது
அல்குர்ஆன்
கோடிவிஷயங்களை உள்ளடக்கியது அல்குர்ஆன்
சுத்தம் உள்ளவர்கள் மட்டும் தொடக்கூடியது
அல்குர்ஆன்
இதயம் சுத்தம் ஆவதற்கே ஓதக்கூடியது அல்குர்ஆன்
அழகுக்கு வாங்கி வைப்பதற்கு அல்ல அல்குர்ஆன்
அலமாரியில் அடுக்கி வைப்பதற்கு அல்ல அல்குர்ஆன்
அனுதினமும் ஓதுவதற்கே அல்குர்ஆன்
அல்லாஹ்விடம் பேசுவதற்கே அல்குர்ஆன்
குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்
குர்ஆனைக் கற்றுக்கொடுங்கள்
குர்ஆனைத் தொட்டு ஓதுங்கள்
குர்ஆனைக் தொட்டு பாருங்கள்
நேர்வழியுண்டு
நன்மையுண்டு
உண்மையுண்டு
உயர்வு உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக