சமுதாயமே சகோதரனே
சண்டை வேண்டாம் – நமக்கு
சண்டை வேண்டாம் – சாதி
சண்டை வேண்டாம்
ஒன்று பட்டால் ஊர் செழிக்கும் .
வேறு பட்டால் ஊர் தவிக்கும் .
சமுதாயம் உள்ளங்கையாகும்
சாதிகள் விரல்களாகும் .
விரல்களின்றி கையாகுமா?
விரல்கள் நீங்கினால் வேலையகுமா?
சாதி பார்த்தா சூரியன் ஒளி
வீசுகிறது?
சாதி பார்த்தா காற்று நம்மை
தொடுகிறது?
சாதி பார்த்தா மழை பூமிக்கு
வருகிறது?
சாதி பார்த்தா ஆற்று நீர்
ஓடுகிறது?
சாதி பார்த்தா மரம் கனியை தருகிறது
?
இயற்கை நமக்கு ஒன்றுதானே ?
செய்யும் தொழில் வேறு படலாம்
பேசும் மொழி வேறு படலாம்
வாழும் இடம் வேறுபடலாம்
வணங்கும் முறை மாறு படலாம்
நம்மை காக்கும் தெய்வம் ஒன்றுதானே
?
ஒரு சாதி உழைப்பிலா உணவு
கிடைக்கிறது .
ஒரு சாதி உழைப்பிலா உடை உடுத்துகிறது
.
ஒரு சாதி உழைப்பிலா நோய் தீருகிறது
ஒரு சாதி உழைப்பிலா காவல்
நடக்கிறது
ஒரு சாதி வர்க்கமா நம்மை காக்கிறது
?
எல்லோரின் உழைப்பில் தானே எல்லாமே
கிடைக்கிறது .
சகோதரனே
எந்த சாதிக்காக காந்தி தன்னை
அர்ப்பணித்தார் ?
எந்த சாதிக்காக காமராஜர் தாம் வாழ்வை
காத்தார் ?
எந்த சாதிக்காக காயிதே மில்லத்
செயலாற்றினார் ?
எந்த சாதிக்காக அபுல்கலாம் ஆஜாத் சாதனை புரிந்தார் ?
எந்த சாதிக்காக தலைவர்கள்
வாழ்ந்தார்கள் ?
எல்லோரும் சேர்ந்து தானே
சுதந்திரம் பெற்றார் ?
அன்னை தெரசாவின் சேவையில் ஜாதி
இல்லையே ?
----------------------------------------------------------
ஜாதி இல்லையே ?
கபில்தேவ் சாதனையில் ஜாதி இல்லையே
?
அசாருத்தீன் வெற்றியில் ஜாதி
இல்லையே ?
ஒற்றுமையில் தானே வெற்றி
இருக்கிறது – இந்த
உண்மையில் தானே நம் தேசம்
உயர்ந்திருக்கிறது
எல்லா மதத்தவற்கும் தாய்மை குணம்
ஒன்றுதானே ?
எல்லா நிறத்தவற்கும் இரத்தத்தில்
நிறம் ஒன்றுதானே ?
எல்லா நாட்டவர்க்கும் பிறப்பு
ஒன்றுதானே ?
எல்லா மனிதருக்கும் இறப்பு ஒரு
நாள் உண்டுதானே ?
சுயநல தலைவனின் பேச்சினால் பொது
நலம் பாலாய் போவதா ?
பொது நல சொத்துக்கள் தலைவனின்
சுயநலத்தினால் தீயில் வேகுவதா ?
ஜாதியை தூண்டும் தலைவனை தள்ளி
வைப்போம்
சமதர்மம் நினைக்கும் தலைவனை
தேர்ந்து எடுப்போம்
தனியொரு மனிதனை கொலை செய்தால்
சட்டம் அவனை தண்டிக்கும்
சட்டம் தண்டிக்க தவறினால்
சத்தியம் கண்டிக்க தவறாது
பலிக்கு பலி வாங்குவதால்
பறிதவிப்பது நம் குடும்பம்தானே
நேற்று இருந்தோர் இன்று இல்லையே
இறப்பை நோக்கிதானே எல்லோரும்
நமக்கு நாமே பகைமை வளர்த்தால்
நாளை நம் மக்களின் நிலை என்ன
நடப்பவையெல்லாம் நல்லவையாகவே
நடக்கட்டும்
நேசம் கொள்வோம்
நெருக்கம் கொள்வோம்
நேர்மை பயில்வோம்
தேசம் காப்போம் – சண்டை வேண்டாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக