தூக்கம் மரணத்தின் ஒத்திகை
மரணம் மறுமையின் திறவுகோல்
மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல
மரணம் மறுமை வாழ்வின் தொடர்ச்சி
நல்லவர்க்கு மரணம் சமாதானம்
தீயவர்களுக்கு மரணம் சமாதானம்
நல்லவர்க்கு மரணம் சுவனத்தை காட்டும்
தீயவருக்கு மரணம் நரகத்தை காட்டும்
பொய்யான உலகத்தில் நிஜத்தை காட்டுவதுதான் மரணம்
மரணத்தை சந்திக்காத உயிரினம் இல்லை
மரணம்விதிக்கப்படாத படைப்புகள் இல்லை
ஜனனம் எடுக்கும் போதே மரணம் விதிக்கப்படுகிறது
குழந்தையை விட்டு தாயை தவிக்கவிட்டு
குழந்தையை கொண்டு செல்கிறது மரணம்
நேசமுள்ள மனைவியை பறித்து விடுகிறது மரணம்
பாசமுள்ள கணவரை தவிக்க விடுகிறது மரணம்
வயது வரம்பு பார்ப்பதில்லை மரணம்
வாலிபத்தை மதிப்பதில்லை மரணம்
வயோதிகத்தை கண்டு அவசரப்படுவதில்லை மரணம்
வல்லோனின் திர்ப்புபடி மரணம் நிகழ்கிறது
மரணத்தை கொண்டு நோயை தடுக்கலாம்
மருந்தை கொண்டு மரணத்தை வெல்லமுடியும்
ஆன்மிகம் சொன்ன ஞானிகள் எங்கே
அரசாண்ட மன்னர்கள் எங்கே
அள்ளி கொடுத்த வள்ளல்கள் எங்கே
ஆடி மகிழ்வித்த கலைஞர்கள் எங்கே
அன்புடன் பழகிய நண்பர்கள் எங்கே
மருத்துவ
மாமேதைகள் எங்கே
மரணம் விட்டு வைத்ததா .
அகிலத்தின் ஒளியாய் வந்த
நமது கண்மணி நாயகம் ஸல்லலல்லாஹு
அலைஹி வ ஸல்லம்
எங்கே
மரணம் பொதுவானது , மறுமையே முடிவானது
மரணம் வரும் முன்
இருக்கின்ற ஆயுளை
இருக்கின்ற நாட்களை
இருக்கின்ற நிமிடங்களை
இருக்கின்ற செல்வங்களை
இறைவழியில் செலவு செய்வோம்
நாயகம் ஸல்லலல்லாஹு அலைஹி வ ஸல்லம்
காட்டிய வழியின் படி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக