ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உயர் கீதம் [அதான் ]

எங்கும் முழங்கும் இன்ப நாதம்
இரசூல் தந்த இனிய கீதம்
பொங்கும் கடல் அலை தனிலும்
தங்கி ஒலிக்கும் அருள் கீதம்
      இன்பம் எங்கே என்று தேடி   
ஏங்கி தவிக்கும் ஏழையர்க்கு
இன்பம் இங்கே இன்பம் என்றழைக்கிறது
பண்பு ஈர்க்கும் அருள் கீதம்
இல்லை இல்லை என்று சொல்லி
கொள்ளை பொருள் சேர்த்து வாழும்
கள்ள உள்ளம் படைத்தோரையும்
கவர்ந்து இழக்கும் கவி நாதம்
      மார்க்க வழி நடந்து செல்லும்
      மாண்புமிகு உள்ளங்களை
      மாறா வழி அழைத்துச்சென்று
      மறுமையில் காக்கும் அருமை கீதம்
அன்பால் அருள் தொடரும் கீதம்
ஆறாய் அருள் பெருகும் கீதம்
ஆழத்தில் அருள் நிறைந்த கீதம்
அல்லாஹ் இல்லம் நம்மை அலைக்கும் கீதம்

அல்லாஹ் அக்பர் என தொடங்கும் கீதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக