செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஹாஜிகளே வருக

ஹாஜ்ஜத்துடன் பயணித்து
ஹஜ்ஜை நிறைவேற்றி
ஹக்கன் அருள் பெற்ற
ஹாஜிகளே வருக
அஸ்ஸலாமு அலைக்கும்

நானிலத்தின் உயர் மேதை
நர்சீலர்களின் பெருந்தலைவர்
நற்குணத்தின் நாயகர்
நாயகம் [ஸல்] ரவ்லாவை தரிசித்த
உள்ளங்களே வருக வருக
குற்றங்களை சுமந்து சென்று
குறைகளை கழுவி விட்டு பிறந்த
குழந்தைகளாய் திரும்பி வந்த – புனித
ஹாஜிகளே வருக வருக
நாங்கள் கஅபாவை காண முடியவில்லை – அதை
உங்கள் கண்களில் கண்டோம்
நாங்கள் நாயகத்தை தரிசிக்க முடியவில்லை – அதை
உங்களை அரவணைப்பதில் உணர்தோம்
ஹாஜிகளே
நீங்கள் செய்ய வேண்டிய
இறைவனுக்கு பொருத்தமான
இன்னொரு ஹஜ் இருக்கிறது – அது
ஏழைக்குமருகளின் திருமணங்கள்
அந்த சிறைப்பறைவைகளுக்கு
விடுதலை கொடுங்கள்
அவர்கள் பறந்து மகிழட்டும்
நீங்கள் அஸ்திவாரம் அமைத்து கொடுங்கள்
அவர்கள் மாளிகை கட்டிக்கொள்ளட்டும்
உங்கள் மரண நேரத்தையும்
உங்கள் மன்னரை வாழ்க்கையையும்
உங்கள் மறுமை கேள்விகளையும்

இறைவன் இலேசாக்கி வைக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக