திங்கள், 9 செப்டம்பர், 2013

துயர் தீர்ப்பாய் துயவனே

அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் – என்னை
அரவணைப்பாய் அருளாளா
துன்பம் என்னை துரத்துகின்றதே
சோதனை வழி மறிக்கின்றதே –என்
கண்கள் உன்னை தேடுகின்றதே

காத்தருள்வாய் அருளாளா
மதி மயக்க தவறுகளால் –என்
மனம் என்னை வதைக்கின்றதே  -என்
நாவடக்கம் கொள்ளாததல் – என்

நல்ல மனம் பதைக்கின்றதே

நாளும் என்னை காத்தருள்வாய்
நல்ல சொல்லே நாளும் அருள்வாய்
வாரிசுக்கு நல்ல மகனை தந்தாய்- என்னை
வதைக்கும் துர்குணம் ஏன் தந்தாய் – தீன்
வளரும் நல்ல குணம் அருள்வாய்  - என்
வாழ்வுக்கு  அவனை துணை சேர்ப்பாய்
மனை சிறக்க பெண் மக்களை தந்தாய்
மலர்ந்து நிற்கின்ற பருவமும்  தந்தாய்
மணமாலை சேர வைப்பாய் – தீன்
மணவாளனை சேர்த்து வைப்பாய்  - நபி
மனம் வாழ்த்தும் இல்லற வாழ்வளிப்பாய் .
என் இல்லாள் நல் நோக்கங்கள்
நாளும் நிறைவேற அருள் புரிவாய்
நானிருக்கும் காலமெல்லாம்  - அவள்

நலம் சிறக்க அருள் புரிவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக