நான் எழுத வேண்டும்
உன் புகழ்தனை
எனக்கருள வேண்டும்
நல் அறிவினை
என்னை பிறக்க வைத்தாய்
இவ்வுலகினிலே
உன்னை நினைக்க வைப்பாய்
என் மனதினில்
பொருள் விளக்கி
வைப்பாய்
இனிய தமிழினில்
உன்னை புகழ்ந்து
வைப்பேன்
என் கவிதனில்
எல்லா உலகையும் ஏகமாய்
காக்கும் வல்லோனே
எல்லா
உயிர்களிடத்திலும்
அன்பு கொண்டிருக்கும் ரஹ்மானே
அளவற்ற அருளாளனே
நிகரற்ற அன்புடையோனே
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவி தேடுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக