துரத்தில் வைத்தான்
குளிர்ந்து
வரும் சந்திரனை
பக்கத்தில்
வைத்தான்
காற்றலைகளை
எங்கும்
பரப்பி வைத்தான்
கடலலைகளை
ஏன்கடலுக்குள்
அடக்கி வைத்தான்
மேகங்களை
எங்கும்
அனுப்பி வைத்தான்
- பூமி
தாகங்களை
மழையால்
தீர்த்து வைத்தான்
காகத்தை
குஞ்சை
பிரிய வைத்தான்
காக்கவும்
குயிலை
அனுப்பி வைத்தான்
ஆறுகளை
ஓட்டி
நீர்வளம் தந்தான் –அதை
ஆழ்கடல்
சேர்த்து
அடங்கவும் செய்தான்
மலைகளை
நாட்டி –பூமி
மண் சரிவை கத்தான்
- அதில்
மரங்களை
வளர்த்து
மண் வளம் சேர்த்தான்
நாட்களை
அறிய
வளர் பிறையை தந்தான்
திசைகளை
அறிய
விண்மலர்களை
தந்தான்
நாடுகளை
காண
கப்பலை
தந்தான்
நாளும்
சிந்திக்க
பகுத்தறிவை
தந்தான்
கடலுக்கு
அடியில் தடுப்பு
சுவர் வைத்தான் – அங்கு
கலங்காத
இரு கனவு
நீரை வைத்தான் – நம்
உடலுக்கு
ஒரு இதயத்
தை
வைத்தான் – அது
சரியாவதற்கு
நம்மை இங்கே
அனுப்பி வைத்தான்
தங்கத்தின்
படைப்பை
குறைத்து வைத்தான்
தண்ணீரின்
அளவை
பெருக்கி வைத்தான்
- நம்
தேவையறிந்தே
பொருளை
படைத்தான் – அவனை
தேடுவதற்கே
நம்மை
படைத்தான் .
ஓவியக்
கலைகளை
இலைகளில் தந்தான்
ஒவ்வொரு பூக்களிலும்
வண்ணங்களை தந்தான்
இலைக்கும்
பூவுக்கும்
நிறமாற்றம் தந்தான்
காய்க்கும்
கனிக்கும்
இரு முகம்
தந்தான்
குயிலுக்கு
குரலில்
இனிமை தந்தான்
மயிலுக்கு
தோகையில்
அழகை
தந்தான்
மலரில்
தேனருந்த
வண்டை அழைத்தான் .
மாங்கனி
விதைக்குள்ளும்
வண்டை காத்தான்
கரும்புகுள்ளும்
சுவையை
சேர்த்தே
வைத்தான்
எரும்புக்குள்
ஒற்றுமையை
காண
வைத்தான்
கல்லுக்குள்
உயிர்
தேரையை
வளர்த்தான் - தாய்
கருவுக்குள்ளும்
நம்மை
வடிவமைத்தான்
விரிந்த
ஆல மரத்தை – சின்ன
விதைக்குள்
அடக்கி வைத்தான் –மரம்
விழுந்து
விடாமல் இருக்கவே
விழுதுகளை
ஊன்றி வைத்தான்.
படரும்
சுரை கொடிக்கு
பற்றி
வளர நரம்பு வைத்தான்
பசு
ஈன்றவுடன் கன்றுக்கு – அருந்தும்
பால்
மடியை சொல்லி வைத்தான்
காற்றின்
சுகத்தை
உணர
வைத்தான – அதை
கண்
காணாத பொருளாய்
மறைத்து
வைத்தான் –நம்மை
காப்பவன்
அவனென்று
உணரவும்
வைத்தான் – நம்
கண்
காணாத ஒளியாய்
அவனே
இருந்தான்
அசையும்
பொருளில்
இசையை
வைத்தான் – அந்த
இசைக்கு
உயிர்களை
மயங்கவும்
செய்தான்
அசையும்பொருளாய்
நம்மை
படைத்தான் – நம்மை
அசைக்கும்
விசையாய்
அவனே
இருந்தான்
சிலந்தியின்
வலையில் கட்டிட
கலை
வைத்தான்
சிட்டுவின்
கூட்டினில் கட்டிடும்
முறை
வைத்தான்
பட்டாம்பூச்சிகளை
பதித்திடும்
வண்ணங்களை
தந்தான்
பட்டுப்புழுவின்
எச்சியில்- மின்னிடும்
பட்டை
தந்தான்
நம்
தேவைகளையரிந்தே இவைகளை
படைத்தான்
– அவனை
தேடுவதற்கே
நமக்கு ஈமானை
தந்தான் – இங்கு
கடுகளவு சொல்லி
வைத்தான்
கடலளவு
உலகில்
வைத்தான்
உப்பு
கடலை கசக்க
வைத்தான்-
அந்த
உப்பையே
உணவுக்கு
ருசியாய்
வைத்தான்
உப்பில்லாத
மீனை கடலில்
வளர்த்தான்
– அதை
உப்பு
சேர்த்தே உண்ண
வைத்தான்
மனிதனுக்கு யானையை அடங்க
செய்தான்
– சின்ன
கொசுவுக்கு
மனிதனை
நடுங்க செய்தான்
மீனுக்கு
மீனையே
இறையாய்
வைத்தான் – அந்த
மீனையே
மனிதனுக்கும்
உணவாய்
வைத்தான்
நிழல்
தரும் ஆல மரத்தில்
சிறு
கனியை வைத்தான்
தரை
படும் பூசணிக்காயை
கீலே
வைத்தான் –நம்
தலையை
காக்கவே அதை
மேலே
வைத்தான்
உண்டு
மகிழவே இதை
கீலே
வைத்தான்
உதிரும்
பூக்களை மண்ணில்
மலர
வைத்தான்
உதிராத
பூக்களை விண்ணில்
மிண்ண
வைத்தான்
விதையில்லா
வாழையில்லா
குழை
குழையாய் பழம்
காய்க்காத
கரும்பினிலே
கனியை
மீறும் சுவையை தந்தான்
மூடிய
தோகைக்குள் முத்து கோளத்தை
அடுக்கி
வைத்தான்
மூடிய
சிற்பிக்குள் முத்துகளை
விளைய
வைத்தான்
மூடிய
மாதளைக்குள் முத்துக்களை
மின்ன
வைத்தான்
மூடிகள்
மூன்று போட்டு இளநீரை
தேக்கி
வைத்தான்
விதைகளை
மட்டும் ஊன்ற
சொன்னான்
விளைச்சளை அவனே பெருக
செய்தான்
வேலிகள்போட்டு
பார்க்க
சொன்னான்
வேர்களை
அவனே ஊன்ற
செய்தான்
நாடும்
தேரைக்கு கல்லுக்குள்
உணவளித்தான்
நாடுகள்
பல கடந்து பறவைகள்
உண்ண
வைத்தான் - தன்னை
தேடும்
மனிதனுக்கு அழகாய்
உணவளித்தான்
தேடாத
மனிதனுக்கும் அவனே
உணவளித்தான்
ஆடு
மாடுகளை பெருக
வைத்தான்
பன்றி
நாய்களை சிறுக
வைத்தான்
ஹலாலில்
பெருக்கம்
வைத்தான்
ஹராமில்
பெருக்கம்
குறைத்தான்
நம்
தேவையறிந்து இவைகளை
படைத்தான்
– அவனை
தேடுவதற்கே
அறிவினை
தந்தான்
வளர்த்தும்
தென்னையில் வாரிசுக்கும்
உணவை வைத்தான் –நாம்
வளர்க்காத
பெண்ணையே – நம்
வாழ்க்கைக்கு
துணையாய் சேர்த்தான்
நாம்
நேசிக்கின்ற ஒருவனை
நேர்
எதிரியாய் நிற்க வைத்தான்
நம்
காணத ஒருவரிடம் பாசமழை
பொங்க
வைத்தான்
நல்ல
மனங்களை அவனே
தந்தான்
நல்ல
மார்க்கத்தை அவனே
தந்தான்
தூக்கத்தில்
அவனை மறக்க
வைத்தான்
துக்கத்தில்
அவனை நினைக்க
வைத்தான்
சொர்க்கத்தின் நினைவாய் பெண்ணை
வைத்தான் – வாழ
பக்கத்தில்
அவளை துணையாய்
வைத்தான்
தாயின்
உதிரத்தின் நடுவே
பாலை வைத்தான் – அதை
உண்ணும்
வேளையில் சுரக்க
செய்தான்
குளிரும்
காலத்தில் இதமாய்
தந்தான்
வேனிற்
காலத்தில் குளிராய்
தந்தான்
வளரும்
முடியை தலையில்
தந்தான்
வளராத
முடியை இமையில்
தந்தான்
அழுகையில்
கண்ணீரில் உஷ்ணம்
தந்தான்
ஆனந்த
கண்ணீரில் குளுமை
தந்தான்
தந்தையின்
முதுகுதண்டில் நம்மை
மறைத்து
வைத்தான்
தாயின்
கருவறையில் நம்மை
வடிவமைத்தான்
.
தரணியில்
நம்மை பிறக்க
வைத்தான்
தரையில்
நம்மை வாழ
வைத்தான்
பல
கோடி மனிதனை
படைத்து
வைத்தான்
பல
முகம் தந்து தெரிய
வைத்தான்.
பல
பாஷை பேசும் நாவை
வைத்தான்
பல
குரல் தந்து புரிய மாற்றம்
வைத்தான்
பல
ஓசை அறியும் செவியை
தந்தான்
பல
வாசம் புரியும் நாசியை
தந்தான்
பல
வண்ணம் அறியும் கண்களை
தந்தான்
பல
விஷயம் அறியும் மூளையை
தந்தான்
எலும்பை
சுற்றி சதை
படைத்தான்
சதைக்குள்
பல பிரிவுகள்
வைத்தான்
பிரிவுக்குள்
பல உணர்வுகளை
தந்தான்
உணர்வுக்குள்ளே
பல சுகங்களை
தந்தான்
வளரும்
நகங்களை விரல்களில்
தந்தான்
வளராத
பற்களை அழகாக
தந்தான்
அளவறிந்தே
நமக்கு ------
தந்தான்
அவனை
வணங்குவதற்கே ஈமானை
தந்தான்
நெருப்பில்லாத
அடுப்பாய்
வயிறை
தந்தான் – உணவு
செறிக்கின்ற
நிலையில் உடல் நலம்
தந்தான்
சருமத்தை
போர்த்தி
உதிரத்தை
கத்தான் – உடல்
வேர்வைகள் வெளியேற
வாசல்களும்
அமைத்தான்
மழலையின்
சிரிப்பினிலே
உண்மை
வைத்தான்
மங்கையின்
சிரிப்பினிலே
இன்பம்
வைத்தான்
தாயின்
சிரிப்பினிலே
தன்னை
வைத்தான்
தன்னை
வணங்குவோருக்கு
சுவர்க்கம்
வைத்தான்
கண்ணிழந்த
குருடனுக்கு விரல்களில்
விழி
வைத்தான்
காலில்லாத
முடவனுக்கு கைகளில்
பலம்
சேர்த்தான்
மன
நோயில் திரிவோற்கும்
தினம்
உணவளித்தான்
படு
நோயில் கிடப்போர்க்கும்
மறைமுகமாய்
உணவளித்தான்
துணை
இழந்த விதவைக்கும் துணிவை
துணையாய்
தந்தான்
தாயிழந்த
மழலைக்கு தானே
துணையாய்
நின்றான்
பிறப்பையும்
இறப்பையும்
தன்
வசம் வைத்தான்
நன்மையையும்
தீமையையும் நம்மை
சோதிக்க
தந்தார்கள்
இரவையும்
பகலையும்
தொடரவைத்தன்
– வாழ்வில்
இன்பமும்
துன்பமும் கலந்தே
வைத்தான்
மறுமையை
அறிய வேதங்கள்
தந்தான்
மார்க்கத்தை
அறிய நபியை
தந்தான்
மண்ணுக்குள்
வைரத்தை மறைத்து
வைத்தான்
மாந்தருக்குள்
முஹம்மதை {ஸல்}
பிறக்க
வைத்தான்
ஐவேளை
தொழுகையை
நமக்கு
தந்தான் – அதை
அண்ணல்
நபி வாழ்க்கையில்
கற்றுத்
தந்தான் - தன்னை
தொழுபவர்க்கு
நிம்மதி
தந்தான்
தொழுக
மறந்தவர்க்கு இவ்வுலகையே {மட்டும்}
தந்தான்
அழியாத
செல்வமாய் கல்வியை
தந்தான்
ஐந்து
வயது பிள்ளை நெஞ்சிலும்
குர்ஆனை
பதித்தான்
அழியாத போக்கிஷமாக நம்
அமல்களை காத்தான்
அழிகின்ற நிலையில் இந்த
மானிடனை
வைத்தான்
பாலைவனத்தில் ஜம்ஜம் நீருற்றை
தந்தான்
பயண கப்பல் ஒட்டகத்தையும்
அறிந்தே தந்தான்
இரும்பையும் பித்தளையும் மண்ணுக்குள்
விளைய வைத்தான்
எரிபொருள் பெற்றோலை பூமிக்குள்
உறைய
வைத்தான்
நம் தேவையறிந்தே இவைகளை படைத்தான்
அவனை தேடுவதற்கே நம்மை படைத்தான்
விண்ணில் மிதக்கும் பறவைகளை
தாங்கி
பிடித்தான்
மண்ணில் ஊறும் பாம்புகளுக்கு
கால்கள்
அமைத்தான்
குட்டி தங்கும் தொட்டிதனை கங்காருக்கு
கருணையாய்
வைத்தான்
கட்டுப்படும் நன்றியுணர்வை யானைக்கும் வைத்தான்
நமக்கு கட்டுப்படும் தன்மையை
கால்நடைகளுக்கு
தந்தான்
பாய்ந்து
செல்லும் விலங்குகளை நம்
பகுத்தறிவில்
அடங்க வைத்தான்
அடங்கும்
தன்மையுடன் இவைகளை படைத்தான்-அவனுக்கு
அடங்கி
வாழவே நம்மை படைத்தான்
கப்பலை தந்து நூஹ் நபியை காத்தான்
மீனை வைத்து யூனுஸ் நபியை காத்தான்
பிர்அவ்னின் அரவணைப்பில் மூஸாவை காத்தான்
தன்னளவில் உயர்த்தி ஈஸாவை காத்தான்
எண்ணிலடங்கா உயிரினங்களை உலகில் படைத்தான்
சொல்லி
விளங்காத செயல் திறனை – அதன் வாழ்வினிலே
வைத்தான்
கண்ணெதிரே
உள்ளவைகளை
சொல்ல
வைத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக