பெண்ணினம் பெருமை கொள்ளும். – இந்த
மண்ணினம் போற்றி மகிழும். – இம்
மானிடம் பெருகச் செய்யும்
மாபெரும் பாக்கியமே தாய்மை .
தாயைப்போல் ஓர் உறவில்லை. – அவள்
தந்து வரும் அன்பிற்கோர் எல்லையில்லை .
வானத்தைப்போல் பாசத்தை அள்ளித் தருகிறாள்.
பூமியைப் போல் நம்மை பொறுமை காக்கிறாள் .
கருவுக்குள் வைத்து உதிரம் தந்து
கடைசி வரை நம்மை சுமந்தாள். – நாம்
கண் விழித்து இவ்வுலகை காண
கஷ்டம் தாங்கி நம்மை மகிழ்வுடன் பெற்றாள் .
ஊண், உறக்கம் தன்னில் குறைத்து –நம்
ஊக்கத்தையே பேணி காத்தாள். –நாம்உண்டு உறங்குவதையே –தன்
உயிருக்கு இன்பம் சேர்த்தாள் .
சீராட்டி பாராட்டி சீவி முடித்து –என்
சின்னக் கண்ணுக்கு மை இடுவாள் .
சீருடை அணிவித்து பள்ளிக்கு
சீராக அனுப்பி வைப்பாள் .
கற்றுத்தரும் முதல் பள்ளி தாயல்லவா ?
கடவுளை காட்டி தரும் முதல் குரு தாயல்லவா ?–எந்த
கஷ்டத்திலும்
கருணை காட்டுவது தாயல்லவா ?
கடைசி வரை மாறாத உறவு தாயல்லவா?
இறைவன் தன்னை வணங்க மனிதனை படைத்தான்.
விண்ணை காண விழியை படைத்தான.
விழியை காக்க இமையை படைத்தான்.
தன்னை காண உலகில் தாயை படைத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக