திங்கள், 9 செப்டம்பர், 2013

வார்த்தை

நல்ல வார்த்தை இறையருள் பெருக்கும்.

தீய வார்த்தை இறையருள் தடுக்கும் .

நல்ல வார்த்தை இதயத்தை பூஞ்சோலையாக்கும்

தீய வார்த்தை இதயத்தில் நெருப்பைப்பற்ற வைக்கும்.

நல்ல வார்த்தை மனதின் ஒளியாகும் .

தீய வார்த்தை மனதின் நெருப்பாகும் .

வார்த்தை உறவுகளை இணைய வைக்கும் .

வார்த்தை உறவுகளை சிதற வைக்கும் .


வார்த்தை விருந்திற்கு ருசி சேர்க்கும் .

வார்த்தை விருந்தையே விஷமாக்கும் .

வார்த்தை மனங்களின் முகம் காட்டும் .

வார்த்தைமனங்களின் வேஷம் மறைக்கும் .

வார்த்தை கண்களை மலரச்செய்யும் .

வார்த்தை கண்களை கலங்க செய்யும் .

வார்த்தை தன்னம்பிக்கையை வளர செய்யும் .

வார்த்தை தற்கொலைக்கு முயல செய்யும் .

வார்த்தை சந்தேகத்தை உண்டாக்கும் .

வார்த்தை சந்தேகத்தை சமாதியாக்கும் .

வார்த்தை வர்த்தகத்தை வளரச்செய்யும் .

வார்த்தை வடிக்கையாளர்களின் வரவை குறைக்கும் .

வார்த்தை கடன் கிடைக்க வழி செய்யும் .

வார்த்தை கடன் கொடுத்தவரையே கொலை செய்யும் .

வார்த்தை கல்யாணத்திற்கு வழி வகுக்கும் .

வார்த்தை  கல்யாணத்தையே நிறுத்தி விடும் .

வார்த்தை குற்றவாளியை கூண்டில் நிறுத்த வைக்கும் .

வார்த்தை நிரபராதியை குற்றவாளியாக்கும் .

வார்த்தை சபையோரை அமைதியாக்கும் .

வார்த்தை சபையையே கலகமாக்கும் .

வார்த்தை சமாதானத்திற்கு வழி வகுக்கும் .

வார்த்தை சண்டைக்கு தூண்டி விடும் .

வார்த்தை தொண்டனை தலைவனாக்கும் .

வார்த்தை தலைவனை தொண்டனாக்கும் .

வார்த்தை இறை நேசருக்கு அமானத்து .

வார்த்தை குழப்பவாதிக்கு அனாவசியம் .

வார்த்தை விழிநீரை வரவழைக்கும் .

வார்த்தை விழிநீரை சூடாக்கும் .

வார்த்தை வேதனைக்கு மருந்து போடும் .

வார்த்தை வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும்.

வார்த்தை தொடாமல் ஒருவரை அரவணைக்கும் .

வார்த்தை தொடாமல் ஒருவரை அடிக்கும் .

வார்த்தை அண்டை வீட்டாரை சொந்தமாக்கும்
 .
வார்த்தை சொந்தத்தையே தூரமாக்கும்.

வார்த்தை உள்ளங்களை கலங்க செய்யும் .

வார்த்தை உள்ளங்களை மகிழச்செய்யும் .

வார்த்தை உள்ளங்களை விழிக்கச்செய்யும.

வார்த்தை உள்ளங்களை உறங்கச்செய்யும் .

வார்த்தை கற்றோரின் உயர்வை காட்டும் .

வார்த்தை கல்லாதோரின் தாழ்வை காட்டும் .

வார்த்தை மனித இனத்தின் அற்புதம் .

வார்த்தை மழலை மொழியின் தெய்வீகம் .

வார்த்தை என் கவிதைக்கு வித்தாகும் 
.
வார்த்தை கவிஞனின் சொத்தாகும் .

வார்த்தை இன்றி வாழ்க்கை இல்லை .

வார்த்தை தவறினால் வாழ்வே இல்லை .

பொய்யான வார்த்தை உன் புகழை குறைக்கும் 

புறம் கூறும் வார்த்தை உன் நன்மைகளை அழிக்கும் .

சினம் கொண்ட வார்த்தை உன்னை சீரழிக்கும் .

குணம் கொண்ட வார்த்தை நல்ல மனிதனாக்கும் .

அல்லாஹ்வின் வார்த்தை அல்குர்ஆன் .

அண்ணல் நபி ஸல் வார்த்தை அல்ஹதிஸ் .

இறை அடியார்களின் வார்த்தை அஸ்ஸலாமு அலைக்கும்

இறை அருள் பெற்றோர் வார்த்தை அல்ஹம்துலில்லாஹ் .

நாவைத்தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம் .

நாளும் நல்ல வார்த்தை பேச பழகுவோம் .

நாளைய வாழ்வுக்கு நன்மைகள் சேர்ப்போம் .

நாளும் நாயனை தொழுது மகிழ்வோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக