திங்கள், 9 செப்டம்பர், 2013

திருமணம்



திருமணம் இன்பம் சேர்க்கும் இனிய திருவிழா
திருமணம் இல்லற வாழ்கைக்கு அஸ்திவாரம்
திருமணம் இரு இதய நதிகளின் இனிய சங்கமம்
திருமணம் ஆண் பெண் கற்பிற்கு பாதுகாப்பு கவசம்

திருமணம் ஆண் பெண் உறவுக்கு அங்கீகாரம்
திருமணம் இளமை இளைப்பாறும் இவ்வுலக சுவர்க்கம்
திருமணம் மன அழுத்தத்திற்கு மா மருந்து
திருமணம் புதிய உறவு முறைகளை இணைக்கும் பாலம்
திருமணம்  இறைவனால் சேர்த்துவைக்கப்படும் அற்புத உறவு
திருமணம்  நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வாழ்க்கை முறை
திருமணம்  சமுதாயத்தில் நம் அந்தஸ்த்தை உயர்த்துகிறது
திருமணம்  வாழ்க்கை படித்தரங்களை  உணர வைக்கிறது
திருமணம்  நம் பெற்றோரின் தியாகங்களை புரிய வைக்கிறது
திருமணம்  நம்மை பெற்றோரின் ஸ்தானத்திற்கே கொண்டு செல்கிறது
திருமணம்  வாழ்க்கையின் இறுதி துணையை நம்மில் இணையவைக்கிறது
திருமணம்  ஆன்மீக உயர்வுக்கு தெளிவைத் தருகிறது
திருமணம்  சொர்க்க வாழ்வுக்கு நம்மை சிபாரிசு செய்கிறது
திருமணம்  மனித இனத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு
இறைவனை வணங்குவதற்குத்தான் மனித வாழ்க்கை – அந்த
இறைவனை வணங்குவதற்கு வரிசை உருவாக்குவதற்குத்தான்
இந்த திருமண சேர்க்கை
திருமணம்  வாழ்க்கையின் மறுமலர்ச்சியே
அது தரும் மகிழ்ச்சியே
நாளை மறுமைக்கு தரும் வாழ்க்கை பயிற்சியே
இனிய மணமக்களே இஸ்லாமிய தீபங்களே
மணம் புரியுங்கள் மனம் மகிழுங்கள் தினம் மகிழுங்கள்
மறை தந்த இறைவனை தினம் வணங்குங்கள்
மறைவழி வாழ்ந்த நிறை நபி,
நானிலத்து உயர்மேதை,
நற்சீலர்களின் பெருந்தலைவர்,
நற்குணத்தின் நாயகம்,
நாயகம் கண்மணி ஸல்லல்லஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின்

வழிமுறையை பின்பற்றி நாயகம்{ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தைக் கொண்டு இடர்களை கடந்து ஈருலக இன்பங்களை இனிதாய் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக