இன்னது நடக்குமென்று
எவரும் அறிந்ததில்லை
-நான்
சொன்னதே நடக்குமென்று
சொன்னவரும்
நிலைத்ததில்லை
வரும் சுகம் அத்தனையும்
வானவன் வகுத்தது தான்
வந்த துயர்
அத்தனைக்கும்
அவன் வகுத்த விதித்த
விதிப்பயன்தான்
மரம் செடி கொடி முதல்
மண்ணுயர் நிலங்களுடன்
தாரணி தந்த இறையவனை
தினம் முறை
துதிக்கின்றன
ஆறறிவு படைத்தவனோ
ஆசைகளை வளர்த்து
கொண்டான் – பொருள்
தேடுவதில் நாட்டம்
கொண்டான்
இல்லாதோரை எண்ண
மறந்தான்- செல்வம்
இருப்போரை எண்ணி
வெந்தான் – என்றும்
இருப்போம் என்று எண்ணி வாழ்ந்தான் –
நாளை
இறப்போம் என்பதை ஏனோ மறந்தான்
மனிதா
நீ இறந்த பின் வாழ்க்கை உண்டு
நீ இங்கு இருந்ததற்கு கேள்வி உண்டு
நீ இரவும் பகலும் ஈமான் கொண்டு
நீ இறைவழி நடந்தால் சொர்க்கம்
உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக