விடியலுக்கு முன்னும் விடியலுக்கு பின்னும்
இன்பம் தரும் அந்த இறைவனை நேசி
காட்சிகள் தந்து நல்ல கண்களையும் தந்த
அந்த இறைவனை நேசி
அங்கங்களை தந்து நல்ல அசைவுகளை தந்த
அந்த
இறைவனை நேசி
நாவினை தந்து நல்ல வார்த்தைகளை தந்த
அந்த
இறைவனை நேசி
செவியினை தந்து நபி ஸல் மொழியினை தந்த
அந்த
இறைவனை நேசி
நல்ல மணங்களை உணரும் நாசியை தந்த
அந்த
இறைவனை நேசி
பசியினை தந்து நல்ல உணவுகளையும் தந்த
அந்த
இறைவனை நேசி
ஜீரணத்தை தந்து அதை வெளியாக்கிவைத்த
அந்த
இறைவனை நேசி
தாய் பாசத்தை தந்து பொறுமையுடன் காத்த
அந்த இறைவனை நேசி
பெற்றோரை தந்து நம்மை பேணுதலுடன் வளர்த்த
அந்த
இறைவனை நேசி
கற்றோரை தந்து நல்ல தீன் கல்வியை தந்த
அந்த
இறைவனை நேசி
இளமையை தந்து இன்ப நினைவுகளையும் தந்த
அந்த
இறைவனை நேசி
இளமை இளைப்பாற நல்ல மனைவியையும் தந்த
அந்த
இறைவனை நேசி
இல்லறத்தின் துடிப்பில் மழலை செல்வங்களை தந்த
அந்த
இறைவனை நேசி
பெற்ற மக்களின் வளர்சியில் மகிழ்வினை தந்த
அந்த
இறைவனை நேசி
மக்களின் படிப்பில் பல உயர்வுகளையும் தந்த
அந்த
இறைவனை நேசி
ஆழ்ந்த உறக்கத்தையும் மன அமைதியையும் தந்த
அந்த
இறைவனை நேசி
நல்லதை நல்லது என்று உணர வைத்த
அந்த
இறைவனை நேசி
தீயதை தீயதென்று விளங்கி விலக வைத்த
அந்த
இறைவனை நேசி
பயணங்களில் பாதைகளில் நம்மை பாதுகாத்துநடத்தும்
அந்த
இறைவனை நேசி
செய்த பாவங்களை மன்னித்து பக்குவமாய் கரை
சேர்க்கும்
அந்த
இறைவனை நேசி
உண்மையையே பேசி நன்மையாய் வாழ்ந்து காட்டிய
உத்தமநபியின் உம்மத்தில் நம்மைப்பிறக்க வைத்த
அந்த
இறைவனை நேசி
ஐவேளை தொழுகையை நமக்கு கடமையாக்கி வைத்த
அந்த
இறைவனை நேசி
இறப்பிற்கு பின்னும் நம் இறக்காத சொர்க்கத்தைப்
பெற அந்த இறைவனை நேசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக