மதி ரவி ஒளி தந்து
மண்ணுயிர் காப்பவனே , எங்கள்
மனங்களில் ஈமான் ஒளி நிறைந்து
நல் வழி தன்னை காண வைப்பாய்
இடி மின்னல் தோற்றுவித்து
இனிய மழை பொழிபவனே – எங்கள்
இடர் இன்னல் போக்கிவித்து ,
இன்ப வாழ்வு தந்தருள்வாய்
இதய மலர் ஒன்றமைத்து அதில்
இன்ப மனம் தந்தோனே .
இணைந்து வாழும் உறவுகளை
நிறைந்தெமக்கு தந்தருள்வாய்
ஐயிரண்டு திங்கள் என்னை
அன்னை குடில் வைத்தவனே ,
எங்கள்
அன்னை தந்த நலவால் எங்கள்
நிலை உயர வைப்பாய்
மலரில் பல எழில் வடித்து நல்ல
மணமும் அதில் நிறைநத்தோனே , நாங்கள்
தினமும் உனை நினைத்து மனம்
பொருந்தும் தொழுகை நிலையருள்வாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக