கலங்காதே மனமே
வருந்தாதே தினமே
வருங்காலம் உனதே
இழக்காதே துணிவை
விதித்தது வருமென்று
நினைத்திடு மனமே – இறைவன்
வகுத்தது உனக்குண்டு
செயல்படு தினமே
கணக்கினில் அவன் முறை
தப்பாது தினமே –நீ
வணங்கிடு உழைத்திடு
தவறாது தினமே
செழித்திடும் மரங்களும் – இலை
உதிர்ந்த பின் துளிர்வதுண்டு
இனித்திடும் நம் வாழ்வினில் -சில
இழப்புகளும் வந்து மறைவதுண்டு
காதல் தடம் மாறும்
பாசம் நிறம் மாறும்
சேரும் பொருள் போகும்
வாழும் இடம் மாறும்
பொறுத்தால் சுகம் சேரும்
பட்ட கடனால் மனம் கலங்கும்
கிட்ட சொந்தமும் உன்னை ஒதுக்கும்
உற்ற நண்பனும் உன்னை பிரிவான் – நீ
எட்ட நின்றால் இறைவன் காப்பான்
பிரிவில்தான் நட்பு வளரும்
வறுமையில் தான் சொந்தம் தெரியும்
இரவில் தான் வெள்ளி சுடரும்
துயரில் தான் இன்பம் மலரும்
உன்னிலும் -----------ஆயிரம் ஆயிரம் –இதை
உன் மனம் உணர்ந்து பார்த்தால்
ஆறறிவு அமைய பெரும்
கலங்காதே மனமே
விதித்தது வருமென்று
நினைத்திடு மனமே - இறைவா
வகுத்தது உனக்குண்டு செயல் படு
கணக்கில் அவன் முறை
தப்பாது தினமே – நீ
இறைவனை வணங்கிடு உழைத்திடு
தவறாது தினமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக