ஞானிக்கு தனிமை அழகு
சம்சாரிக்கு குடும்பம் அழகு
இல்லறத்திற்கு மனைவி அழகு
இதயத்திற்கு பிரார்த்தினை அழகு
விருந்தினர்களை உபசரிப்பது அழகு
சிந்தாமல் உண்பது அழகு
உண்மை பேசுவது அழகு
உழைத்து உண்பது சொல்லுக்கு அழகு
தந்தைக்கு பணிவது தனையனுக்கு அழகு
தாயை போற்றுவது தன்னுயர்வுக்கு அழகு
நல்லுபதேசம் கேட்பது கற்பவருக்கு அழகு
கற்றுக் கொடுப்பது கற்றவருக்கு அழகு
பொதுநலம் நினைப்பது தலைவனுக்கு அழகு
தன்னலம் மறப்பது தியாகிக்கு அழகு
விண்ணுக்கு விண்மீன்கள் அழகு
மண்ணுக்கு மனிதர்களின் நன்னடத்தை அழகு
மனிதர்களுக்கு இறைவனை வணங்குவது அழகு
மன்னுயிர் காப்பது இறைவனுக்கு அழகு
இறை நம்பிக்கைக்கு பொறுமையே அழகு
இதய அமைதிக்கு தர்மமே அழகு
வாழ்த்துவதற்கு மணமக்கள் அழகு
வளர்ப்பவருக்கு தென்னைதரும் அழகு
பசித்தபின் உண்பது வயிற்றுக்கு அழகு
பங்கிட்டு உண்பது பண்பாட்டிற்கு அழகு
காத்திருந்து சந்திப்பது காதலற்கு அழகு
கல்யாணம் செய்வது கொள்வது கற்பிற்கு அழகு
விதைத்து முளைக்கும் போது பூமியே அழகு
வளரும் பயிருக்கு தாங்கும் வரப்பே அழகு
வாடும் பயிருக்கு தண்ணிரே அழகு
விளைந்த பயிருக்கு அறுவடையே அழகு
நினைத்தது நடக்கும்போது நெஞ்சம்தான் அழகு
உழைத்தவர் பெறும்போது ஊதியம்தான் அழகு
குருவி காட்டும் கூட்டிற்கு பின்னல் அழகு
குஞ்சை அணைக்கும் கோழிக்கு தாய்மை அழகு
கன்றை அழைக்கும் பசுவின் பாசம் அழகு
கறந்த பின் குடிக்கும் கன்றின் துடிப்பு அழகு
வட்டமிடும் வண்டுக்கு வண்ணமலர் அழகு
சுற்றிவரும் தென்றலுக்கு சோலைவனம் அழகு
தத்திவரும் குழைந்தைக்கு தாய் முகம் அழகு
தாவிவரும் மான்களுக்கு கானகமே அழகு
சிற்றெரும்பு சிறுகூட்டம் செல்வதும் அழகு
சிறுகுருவி பெருங்கூட்டம் சீராய் பறப்பதும்
அழகு
சுற்றிவரும் தேனிக்கள் தேனை சேர்ப்பதும் அழகு
சிறுநதியில் சிறுமீன்கள் எதிர் நீச்சல் அழகு
புல்நுனியில் தூங்கும் பனித்துளி அழகு
பனிப்புல்லை மேயும் வெண்முயல் அழகு
வெண்முயல் ஓடும் விரைஓட்டம் அழகு
வேடிக்கை பார்க்கும் நம் மணம் அழகு
மாந்தோப்பில் குதியாட்டம் மந்திகளுக்கு அழகு
மந்திகளின் தொங்கோட்டம் புளியமரத்திற்கு அழகு
சிருநதியில் சிறுவர்கள் குதியாட்டம் அழகு
சிறுமீன்கள் மிரண்டோடும் விளையாட்டும் அழகு
வளர்ச்சியில் வளர்மதி வடிவம் அழகு
வண்ணங்களில் வானவில் கம்பீரம் அழகு
மலர்களில் மல்லிகை வெண்மை அழகு
மதங்களில் மார்கழி வசந்தம் அழகு
பிறந்த இடம் வாழைக்கு அழகு
புகுந்த வீடு பெண்ணுக்கு அழகு
நிறைகுடநீர் வீட்டுக்கு அழகு
நேசக்கரம் நாட்டுக்கு அழகு
கற்பனைகளில்
காதல் கற்பனைகளே அழகு
காட்சிகளில் காதல் காட்சிகளே அழகு
கடிதங்களில் காதல் கடிதங்களே அழகு
கனவுகளில் காதல் கனவுகளே அழகு
மாலை மயக்கும் மங்கைக்கு அழகு
மறைந்த நிலா மேகத்திற்கு அழகு
மலரும் நினைகள் நினைவுக்கு அழகு
புலரும் பொழுது உயிரினங்களுக்கு அழகு
மனைவி எட்ட பார்வையில் அவள் இளம்நெஞ்சே அழகு
கிட்ட பார்வையில் செவ்விதலே அழகு
தொட்டுப்பார்க்கையில் தொடும் இடமே அழகு
முத்த மழைகளில் முகமெல்லாம் அழகு
இலைமறைந்த மாங்கனி மரம் காணும் அழகு
தலை மறைந்த மாதர் முகம் பெண்மைக்கு அழகு
ஊடல் கொண்ட மனைவியின் புன்முறுவல் அழகு
உறவுக்குப்பின் குளித்து வரும் கூந்தல் அழகு
குரல்தந்து பால் கேட்கும் மழலையின் குரல் அழகு
மடியில் வைத்து பாலூட்டும் தாயின் முகமலர்ச்சி அழகு
தொட்டிலிட்டு தாலாட்டும் தாயின் தமிழ் பாட்டு அழகு
தூங்கி எழும் மழலையின் கண்மின்னல் அழகு
தாவிச்செல்லும் பூங்கொடிக்கு தாங்கும் மரம் அழகு
தவித்துவரும் நண்பருக்கு தரும் உதவி அழகு
திசைமாறிய கப்பலுக்கு கலங்கரைவிளக்கம் அழகு
இடம்மாறிய காதலருக்கு அனுப்பும் கடிதம் அழகு
சிறுவிளக்கு குடிசைக்கு அழகு
சிறுசேமிப்பு ஏழைக்கு அழகு
சிக்கனவாழ்க்கை உயர்வுக்கு அழகு
சினம் காப்பது பொறுமைக்கு அழகு
பள்ளிவாழ்க்கையில் வினயமில்லா விளையாட்டும் அழகு
கல்லூரி வாழ்க்கையில் இளமையின் உணர்வுகள் அழகு
காலேஜ் வாழ்க்கையின் இனிய சந்திப்புகள் அழகு
கட்டடிக்கும் நாட்களில் புதிய அனுபவங்கள் அழகு
கடவுளின் நெஞ்சில் கருணைதான் அழகு
கவிஞனின் நெஞ்சில் கற்பனைதான் அழகு
ஆளுபவர் நெஞ்சில் அதிகாரம் அழகு
ஆடுபவர் நெஞ்சில் அரங்கேற்றம் அழகு
அணைக்கையில் அன்பு மனைவி அழகு
அரவணைக்கையில் அருமை குழந்தை அழகு
ஆதரிக்கையில் அநாதை அழகு
அள்ளி குடிக்கையில் ஆற்று நீரே அழகு
இறைப்புகழ் படிவரும் கடல் அழகு
கரைமடி தாவிவரும் கடல் அலை அழகு
அலைவிட்டுச்செல்லும் நுரை அழகு
நுரைப்பூவை அள்ளிகொண்டால் நம் கரம் அழகு
மின்னலுக்கு காத்திருக்கும் தாழம்பூவின் தன்னடக்கம் அழகு
விடியலுக்கு காத்திருக்கும் தாமரையின் தியான நிலை அழகு
மாலைக்கு காத்திருக்கும் மல்லிகை மவுனமுகம் அழகு
காத்திருந்து கதவை திறக்கும் இல்லாளின் இனிய முகம் அழகு
சிறு மழையில் நுரைவீடுகள் மிதந்து செல்வது அழகு
சின்ன வாய்க்கையில் நெளிந்து ஓடும் நீரோட்டம்
அழகு
பாறைகள் நடுவே வளைந்தோடும் நதியின் நடனம் அழகு
பாய்ந்து வரும் பாலருவி கொட்டும் பரவசம் அழகு
நல்ல சொல் நல்ல வார்த்தை பேச கேட்க அழகு
நல்லதோர் மனைவி அமைந்தால் நாளும் பொழுதும் அழகு
நல்லதோர் உடல் அமைந்தால் வாழும் வாழ்க்கை அழகு
கதிரவனின் காலை உதயம் கடலுக்கு அழகு
அந்தி பொழுது மஞ்சள் வானம் மாலைக்கு அழகு
நிறைவுநாள் நிலவொளி இரவுக்கு அழகு
உறவு காணும் உயிரனங்களுக்கு நள்ளிரவு அழகு
உண்ணா நோன்பு ஆரோக்யத்திற்கு அழகு
சிரம் பணிதல் இறை நேசருக்கு அழகு
இறைவணக்கம் மேன்மைக்கு அழகு
இரவு வணக்கம் பேரின்பத்திற்கு அழகு
மக்களின் சிரிப்பு மன்னருக்கு அழகு
மன்னரின் நேர்மை மக்களுக்கு அழகு
மலர்களின் விரிப்பு மணமேடைக்கு அழகு
மணமகளின் சிரிப்பு மணவாளனுக்கு அழகு
பணம் நிறைந்தால் பர்ஸுக்கு அழகு
பாக்கெட் நிறைந்தால் பார்வையில் அழகு
பார்வைகளின் உறவால் செலவுகள் அழகு
செலவுகளின் விளைவால் நேசங்கள் அழகு
விதவைக்கு மறுமணம் மறுமலர்ச்சிக்கு அழகு
வீரனின் தியாக மனம் தேச எல்லைக்கு அழகு
அறிவொளி ஏற்றி வைக்கும் ஆசிரியரின் சேவை அழகு
அனைவருக்கும் உணவுதரும் உழவன் மனம் அழகு
வண்டி இழுப்பவனின் நிமிர்ந்த நெஞ்சே அழகு
உந்தி இழுக்கையில் விழும் வேர்வைத்துளி அழகு
உழைப்பினில் உண்டிடும் ஒவ்வொரு சோறும் அழகு
களைப்பினில் விடும் ஒவ்வொரு மூச்சும் அழகு
பொருளோடு புன்னகை – நேர்மை வியாபாரிக்கு அழகு
தரம் அறிந்து விலை தருவது வாங்குபவருக்கு அழகு
தேவையறிந்து கடன் தருவது கொடுப்பவருக்கு அழகு
தவணைபடி தந்து விடுவது வாங்கியவருக்கு அழகு
மாட்டுக்கூட்டம் ஆட்டுக்கூட்டம் மேய்ப்பவனுக்கு
அழகு
மரக்கூட்டம் , பழக்கூட்டம் மந்திகளுக்கு அழகு
பணத்தோட்டம் மனத்தோட்டம் ஆசை மனிதனுக்கு அழகு
இந்த விளையாட்டும் வேடிக்கையும் படைத்த இறைவனுக்கு
அழகு
மூன்றெழுத்து தமிழ் மொழி கற்பதற்கு அழகு
மூவேந்தர் அரசாட்சி வரலாற்றுக்கு அழகு
முக்கனி பரிமாற்றம் விருந்துக்கு அழகு
முக்கடல் சங்கமம் குமரிக்கு அழகு
முயற்சிக்கு பின் கிடைக்கும் வெற்றி அழகு
உழைப்பிற்கு பின் கிடைக்கும் ஊதியம் அழகு
கோபத்தை விழுங்கும் பொறுமை அழகு
புகழ்ச்சிக்கு நாணும் அறிஞனின் அடக்கம் அழகு
இறையில்லம் காண்பது கண்ணுக்கு அழகு
இறைவேதம் படிப்பது நாவுக்கு அழகு
இறைபோதனை கேட்பது செவிக்கு அழகு
இறைவனைத்தொழுவது நம் உயிருக்கு அழகு
மருத்துவரின் மனிதநேயம் நோயாளிக்கு அழகு
காவலரின் கடமையுணர்வு கட்டுபாட்டிற்கு அழகு
ஓட்டுனரின் பொறுப்புணர்வு பிரயாணிகளுக்கு அழகு
நீதிப்படி தீர்ப்பளிப்பது நீதிக்கு அழகு
உடல் வருத்தி உடைநெய்யும் திறன் அழகு
துப்புரவாளரின் தினப்பணி ஊருக்குள் அழகு
சிகை அலங்காரம் பணியாளர்களின் கைநிதானம் அழகு
கல்உடைக்கும் தொழிலாளர்களின் காய்ந்த தேகம்
அழகு
அழுக்கு நீக்கி ஆடைதரும் சலவையாளியின் சேவைமணம்
அழகு
ஆடைக்கு அழகு சேர்க்கும் தையலரின் வடிவமைப்பு
அழகு
பொருள்தந்து மணமுடிக்கும் ஆண்மகனின் உயர்குணம்
அழகு
மணமுடித்து வழியனுப்பும் பெற்றோரின் ஆனந்த
கண்ணிர் அழகு
வரவறிந்து செலவு செய்யும் மனைவியின் சிக்கன
வாழ்க்கை அழகு
மனைவி குணமறிந்து கொடுத்துவரும் கணவரின்
பொறுப்புணர்வு அழகு
சுபகாரியங்களில் சொந்தங்களின் நெருக்கம் அழகு
சோதனை காலங்களில் நண்பர்களின் ஆலோசனைகள்,உதவி
அழகு
வசதியான காலங்களில் வாரிசுகள் உரிமைகள் அழகு
வயதான காலங்களில் வரும் பென்ஷன் தொகைதான் அழகு
அண்ணாவின் பேச்சாற்றல் கேட்பதற்கு அழகு
கண்ணதாசனின் கவிதைகள் படிப்பதற்கு அழகு
சிவாஜியின் நடிப்பு திறன் ரசிப்பதற்கு அழகு
எம்ஜிஆரின் வள்ளல் குணம் போற்றுவதற்கு அழகு
வைரமுத்துவின் வார்த்தைகள் ரசிப்பதற்கு அழகு
வாலியின் தத்துவப்பாடல்கள் கேட்பதற்கு அழகு
கல்விக்கு உயிர் தந்த காமராஜரின் பொதுநலம் அழகு
கற்றவரும் போற்றும் அவரின் மேதைத்தனம் அழகு
சத்துணவு முதலில் தந்த அந்த ஏழை மணம் அழகு
சாகும்வரை எளிமையில் வாழ்ந்த அந்த தங்கமணம்
அஹிம்சையில் அண்ணல் காந்தி வாழ்க்கை அழகு
சகிப்பு தன்மைக்கு ஏசுநாதர் வாழ்க்கை அழகு
நல்வழிக்கு அல்லாஹ்வின் திருமறை அழகு
நன்னடத்தைக்கு நபிநாதரின் வாழ்க்கை அழகு
நாயகம் [ஸல்] கட்டித்தந்த நம் வாழ்க்கை முறை
அழகு
நாயகத்தோழர்கள் சகாபாக்கள் எத்திவைத்த நாம்
கண்ட இஸ்லாம் அழகு
மாதங்களில் ரமலான் மாதம் அழகு
இரவுகளில் புனித லைலத்துல்கத்று இரவு அழகு
தொழுகைகளில் தராவீஹ் தொழுகை அழகு
பெருநாளில் ஈதுல்பித்று அழகு
இறைவனின் படைப்பில் மனிதன் அழகு
மனிதனின் அமைப்பில் கண்கள் அழகு
கண்கள் கண்டதால் காட்சிகள் அழகு
காட்சிகள் தந்தது –என் கவிதைகளுக்கு அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக