திங்கள், 9 செப்டம்பர், 2013

சுகம் பெற கூலியா ?

சுகம் தரும் சொர்க்கத்திடம் கூலி கேட்கலாமா ? வாழ
துணை வரும் பெண்ணிடம் பணம் {வரதட்சிணை} – பெண்ணை
சுமந்து தரும் பெற்றோரிடம் – நகை பேரம் பேசலாமா?-இன்பச்
சுவை தரும் பெண்ணிடம் – நாம் சோரம் போகலாமா?

செடி தரும் மலரிடம் தென்றல்  கூலி கேட்கிறதா?
தேன் தரும் பூவிடம் வண்டு கூலி கேட்கிறதா ?
ஒளி தரும் நிலவிடம் இரவு கூலி கேட்கிறதா ?
சுவை தரும் கனியிடம் கிளி கூலி கேட்கிறதா ?
ஓடி வரும் நதியிடம் கடல் கூலி கேட்கிறதா ?
காத்து வரும் இமையிடம் விழி கூலி கேட்கிறதா ?
காக்க வரும் பெண்ணிடம் நாம் கூலி கேட்காலமா ? இது நியாயமா ?
அண்ணல் நபி வாழ்க்கையை பின்பற்றுங்கள் – வல்ல
அல்லாஹ்வின் நல்லருளை தினம் அடையுங்கள்
கிளையை ஒடித்து கனியை பறிக்காதீர்கள் – பெண்ணை
பெற்றவர் மனம் சிதைத்து மணம் முடிக்கதீர்கள் .
பெண்ணுக்கு மகர் தந்து மணம் முடியுங்கள் –பெண்ணை
பெற்றவர் மணம் கவர்ந்து வாழ்க்கையை தொடங்குங்கள்.
சிப்பி தந்த முத்துக்கு விலை தருகிறோம் .
சிற்பி தந்த கலைக்கு விலை தருகிறோம் .
உருக்கி எடுத்த பொண்ணுக்கு விலை தருகிறோம் .
உழவன் தரும் நெல்லுக்கு விலை தருகிறோம் .
புலவன் தரும் சொல்லுக்கு விலை தருகிறோம் .
வாழை தரும் கனிக்கு விலை தருகிறோம் .
நம்மோடு வாழ வரும் கன்னிகளிடம் ஏன் விலையாக போகிறோம் ?
பெண்ணுக்கு மகர் தந்து , பொருள் தந்து மண முடியுங்கள் –பெண்ணை
பெற்றவர் மனம் கவர்ந்து வாழ்க்கை தொடங்குங்கள் .
நம்மை பேணி வளர்த்தவளும் பெண்தானே அதற்கு என்ன விலை ?
இன்று நமக்கு கண்ணியம் சேர்ப்பவள் வரும் பெண்தானே? – நமக்காக
நான்கு சுவர்களுக்குள் காத்து கிடப்பவளும் இந்த பெண் தானே ?
நாளை நமக்கு வாரிசை பெற்று தருபவளும் இந்த பெண் தானே?
 நம்முடன் கடைசிவரை வருவதும் இந்த பெண் தானே
அவளிடமா கூலி கேட்பது –இது நியாயமா ?
இல்லறத்தை நாடி நிற்கும் இளைஞர்களே
பெண்ணுக்கு பொருள் தந்து மணமுடியுங்கள் .
பெற்றோர் மனம் கவர்ந்து வாழ்க்கை தொடங்குங்கள்.
இறைவனுக்கு அஞ்சுங்கள். இல்லறம் தொடங்குங்கள் .

இறை பொருத்தம் அடையுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக