சகோதரா !
விடியலுக்கு முன்பே நீ எழுந்து விடு தினம்
விடிய வைப்பவனை நீ
தொழுது விடு – ஈமானை
வெளிச்சத்தை மனதில் ஏற்றி விடு செய்யும்
வேலையை முறையாய் தொடங்கிவிடு
பெற்றோரின் விருப்பம் சார்ந்து இரு – உன்னை
கட்டியவனின் தேவையை தெரிந்து கொடு – பெற்ற
மக்களின் இறைவனின் பொறுப்பில் விடு
இளமை இரவு யவ்வனம் – அது
இறைவன் தந்த சீதனம் – அதை
விரயம் ஆகாமல் காக்கணும் – இதை
முறையாய் இல்லறத்தில் சேர்க்கணும்
இதயம் ஒரு பொக்கிஷம் – அது
இறைவன் அமரும் ஆசனம் – அதை
இதமாய் தினமும் பேணணும் – தினம்
முறையாய் திக்ரில் களிக்கனும்
சகோதரா
நாளும் பொழுதும் மாற்றம் உண்டு
நாளைய வாழ்வில் சுகங்கள் உண்டு
மாறும் நிலையை புரிந்து கொண்டு – நாளை
மலரும் வாழ்க்கையை உணர்வாய் இன்று
நாம் வாழும் வாழ்க்கை சிறியது
நாளை காணும் வாழ்க்கையோ பெரியது – இது
நாயகம் [ஸல்] நமக்கு சொன்னது – இதை
நம்பினால் வாழ்க்கை இனியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக