எது நடக்கணுமோ
அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க
வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை
நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை
நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை
பேசித்தான் ஆக வேண்டும் .
செய்யவேண்டியதை
செய்து கொண்டு தான் இருக்கணும் .
சும்மா இருந்து
கொண்டு பறவைகள் உண்ணவில்லை .
சும்மா இருந்து
கொண்டு எறும்புகள் தின்னவில்லை .
நதிகள் நம்மை
நோக்கி ஓடி வருகிறது .
நாம்தாம் நிலம் தோண்டி நீர் பாய்ச்சனும் .]
விளைய வைப்பது
இறைவன் பொறுப்புதான் - ஆனால்
விதை விதைக்க
வேண்டியது நமது கடமையல்லவா ?
அவசப்படுபவன் காயை தின்கிறான் .
பொறுமை காப்பவன் கனியை சுவைக்கிறான் .
இருந்த
இடத்திலேயே தேரை வாழ்கிறது .
அலைந்து
திரிந்துதான் பறவைகள் உண்ணுகிறது .
குறைந்த
முயற்சியில் செல்வந்தன் வாழ்கிறான் .
உழைத்து ஓய்ந்த
பின்பே ஏழை உண்ணுகிறான் .
இது இறைவனின்
நியதி – இது இறைவனின் அதிகாரம் .
சிலரது வாழ்க்கை
வளர்பிறை .
சிலரது வாழ்க்கை
தேய்பிறை .
சிலரது வாழ்க்கை
பவுர்ணமி .
சிலரது வாழ்க்கை
அமாவசை .
வானத்திலும்
மாற்றங்களும் உண்டு – மனித
வாழ்க்கையிலும்
மாற்றங்கள் உண்டு .
சுகத்தோடு
வாழ்ந்தவர்கள் சுமையோடு போகிறார்கள் .
சோதனைகளை
கடந்தவர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் .
சோதனையின்றி
சுகங்கள் இல்லை – சுகம் மட்டுமே வாழ்க்கை இல்லை .
சோதனைகளை
வெல்வோம் – சுகங்களை அடைவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக