காலைத்தென்றலில் கடமைக்கு விரைந்து செல்லுங்கள்
மாலைத்தென்றல் நம்மை மகிழ்ச்சியில் குளிக்க வைக்கும்
உழைப்பே வாழ்வின் அஸ்திவாரம் – இதை
உணர்ந்தவர்கள் வாழ்வில் இல்லை சோகம்
பறவையும் எறும்பும் படுத்திருந்தே
உண்பதில்லையே –
அதற்கு
பசிக்குணவு கிடைத்த பின்பும் – அந்த
பரமனை நினைக்க மறப்பதில்லையே
ஓடிக்கொண்டே இருந்தால்தானே
ஆறும் ஒருநாள் கடல் சேரும் – அலை
ஆடிக்கொண்டே இருந்தால்தானே
வாடும் தோணி கடல் கரை காணும்
விதியென்று மூலையில் முடங்கி விடாதே –உன்
மதி சொல்லும் வழியில் தான் இறைவனும் நடத்துவான்
வீணே படுத்திருந்து வாழ்வை வீணாக்காதே – உன்னை
படைத்தவனை என்றும் குறை சொல்லாதே
உனக்குள் இருக்கும் அந்த ஒருவனை தெரிந்து விடு
உழைப்பாய் ,உயர்வாய் உண்மைக்கு நீ பாடுபடு - பிறர்க்கு
உதவும் எண்ணங்களை உன்னில் நீ வளர்த்துவிடு –இந்த
உலகம் தந்தவனை தினமும் நீ வணங்கிவிடு –இரு
உலகமும் உன்னை தினமும் வாழ்த்திவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக