ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

இறைவன்

நெஞ்சுக்கு நிம்மதி
இறைவனின் சன்னதி
தினம் முறை அவனை துதி
உன்னை தேடி வரும் சுவனபதி  - அவன்

அண்டங்களின் அதிபதி – நமது
ஆத்மாவின் ஆரம்பம் –நம்
ஆகாரத்தின் ஆதாரம்
கண்ணுக்கு தெரியாதவன்
காட்சிகளில் நிறைந்தவன்
கருத்துகளில் வாழ்பவன் – நம்மை
காக்கும் இறைவனவன்
நம்மை நினைக்க வைப்பவன்
நம் நினைவுக்கு முந்தியவன்
நாம் நினைப்பதையும் பதிபவன்
நாம் விதைப்பதையே தருபவன்
நாளை தீர்ப்புக்கு தலைவனவன்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக