செவ்வாய், 10 செப்டம்பர், 2013

அற்புதம்

அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்
அகிலத்திற்கு அருட்கொடை அல்குர்ஆன்
அருள்நேசர் ஜிப்ரீல்[அலை]அறிவித்தது அல்குர்ஆன்
அண்ணல் நபி ஸல் அமுதவாயால் பிறந்தது அல்குர்ஆன்
அன்பின் மூலம் அல்குர்ஆன்

ஹாஜிகளே வருக

ஹாஜ்ஜத்துடன் பயணித்து
ஹஜ்ஜை நிறைவேற்றி
ஹக்கன் அருள் பெற்ற
ஹாஜிகளே வருக
அஸ்ஸலாமு அலைக்கும்

விதித்தது வரும்

கலங்காதே மனமே
வருந்தாதே தினமே
வருங்காலம் உனதே
இழக்காதே துணிவை
விதித்தது வருமென்று

வாழ்க்கை

எது நடக்கணுமோ அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை பேசித்தான் ஆக வேண்டும் .

திங்கள், 9 செப்டம்பர், 2013

வாழ்க்கை சிறியது


கோதரா !
விடியலுக்கு முன்பே நீ எழுந்து விடு தினம்
விடிய வைப்பவனை  நீ தொழுது விடு – ஈமானை
வெளிச்சத்தை மனதில் ஏற்றி விடு செய்யும்
வேலையை முறையாய் தொடங்கிவிடு
பெற்றோரின் விருப்பம் சார்ந்து இரு – உன்னை

வார்த்தை

நல்ல வார்த்தை இறையருள் பெருக்கும்.

தீய வார்த்தை இறையருள் தடுக்கும் .

நல்ல வார்த்தை இதயத்தை பூஞ்சோலையாக்கும்

தீய வார்த்தை இதயத்தில் நெருப்பைப்பற்ற வைக்கும்.

நல்ல வார்த்தை மனதின் ஒளியாகும் .

தீய வார்த்தை மனதின் நெருப்பாகும் .

வார்த்தை உறவுகளை இணைய வைக்கும் .

வார்த்தை உறவுகளை சிதற வைக்கும் .

மறந்த மனிதன்

இன்னது நடக்குமென்று
எவரும் அறிந்ததில்லை -நான்
சொன்னதே நடக்குமென்று
சொன்னவரும் நிலைத்ததில்லை
வரும் சுகம் அத்தனையும்
வானவன் வகுத்தது தான்

மரணம்


தூக்கம் மரணத்தின் ஒத்திகை
மரணம் மறுமையின் திறவுகோல்
மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல
மரணம் மறுமை வாழ்வின் தொடர்ச்சி

படைப்பினை சிந்திப்போம் படைத்தவனை வணங்குவோம்


சுட்டு விடும் சூரியனை









துரத்தில் வைத்தான்
குளிர்ந்து வரும் சந்திரனை
பக்கத்தில் வைத்தான்
காற்றலைகளை எங்கும்
பரப்பி வைத்தான்

தாய்மை

பெண்ணினம் பெருமை கொள்ளும். – இந்த
மண்ணினம் போற்றி மகிழும். – இம்
மானிடம் பெருகச் செய்யும்
மாபெரும் பாக்கியமே தாய்மை .

நான் கண்ட அழகு

ஞானிக்கு தனிமை அழகு
சம்சாரிக்கு குடும்பம்  அழகு
இல்லறத்திற்கு மனைவி அழகு
இதயத்திற்கு பிரார்த்தினை அழகு
விருந்தினர்களை  உபசரிப்பது அழகு

தேசம் காப்போம்

சமுதாயமே சகோதரனே
சண்டை வேண்டாம் – நமக்கு
சண்டை வேண்டாம் – சாதி
சண்டை வேண்டாம்
ஒன்று பட்டால் ஊர் செழிக்கும் .
வேறு பட்டால் ஊர் தவிக்கும் .

துயர் தீர்ப்பாய் துயவனே

அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் – என்னை
அரவணைப்பாய் அருளாளா
துன்பம் என்னை துரத்துகின்றதே
சோதனை வழி மறிக்கின்றதே –என்
கண்கள் உன்னை தேடுகின்றதே

திருமணம்



திருமணம் இன்பம் சேர்க்கும் இனிய திருவிழா
திருமணம் இல்லற வாழ்கைக்கு அஸ்திவாரம்
திருமணம் இரு இதய நதிகளின் இனிய சங்கமம்
திருமணம் ஆண் பெண் கற்பிற்கு பாதுகாப்பு கவசம்

சுகம் பெற கூலியா ?

சுகம் தரும் சொர்க்கத்திடம் கூலி கேட்கலாமா ? வாழ
துணை வரும் பெண்ணிடம் பணம் {வரதட்சிணை} – பெண்ணை
சுமந்து தரும் பெற்றோரிடம் – நகை பேரம் பேசலாமா?-இன்பச்
சுவை தரும் பெண்ணிடம் – நாம் சோரம் போகலாமா?

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உயர் கீதம் [அதான் ]

எங்கும் முழங்கும் இன்ப நாதம்
இரசூல் தந்த இனிய கீதம்
பொங்கும் கடல் அலை தனிலும்
தங்கி ஒலிக்கும் அருள் கீதம்

நன்றி இறைவா நன்றி


மண்ணின் மடி மீது
கண்ணின் மணி மீது – எம்மை
காத்து வரும் இறைவா
நன்றி இறைவா நன்றி

இறைவா


நான் எழுத வேண்டும்
      உன் புகழ்தனை
எனக்கருள வேண்டும்
      நல் அறிவினை
என்னை பிறக்க வைத்தாய்

இறைவனை நேசி


விடியலுக்கு முன்னும் விடியலுக்கு பின்னும்
இன்பம் தரும் அந்த இறைவனை நேசி
காட்சிகள் தந்து நல்ல கண்களையும் தந்த
அந்த இறைவனை நேசி
அங்கங்களை தந்து நல்ல அசைவுகளை தந்த

இறைவன்

நெஞ்சுக்கு நிம்மதி
இறைவனின் சன்னதி
தினம் முறை அவனை துதி
உன்னை தேடி வரும் சுவனபதி  - அவன்

ஆன்மா உங்களை வாழ்த்தட்டும்

ஈமான் கொண்டவர்களே
ஈந்து வாழுங்கள் இல்லை என்று சொல்லாதீர்கள் .
தர்மம் செய்யுங்கள் செல்வம் குறையாது .
இரைக்க இரைக்கத்தான் நீர் ஊறும் – தர்மம்
கொடுக்க கொடுக்கத்தான் செல்வம் சேரும் .

அஸ்திவாரம்

காலைத்தென்றலில் கடமைக்கு விரைந்து செல்லுங்கள்
மாலைத்தென்றல் நம்மை மகிழ்ச்சியில் குளிக்க வைக்கும்
உழைப்பே வாழ்வின் அஸ்திவாரம் – இதை
உணர்ந்தவர்கள் வாழ்வில் இல்லை சோகம்

அழகியமாதம் வந்தது

கொள்ளையடிக்கும் மாதம் இது – நன்மையை
கொள்ளையடிக்கும் ரமலான் மாதம் இது,
கூட்டுத்தொழுகை தராவீஹில் – முழுக்
குராஆனை ஓதக்கேட்கும் மாதம் இது – நன்மை
கோடி பெரும் மாதம் இது,

அருள்வாய் இறைவா

மதி ரவி ஒளி தந்து
மண்ணுயிர் காப்பவனே , எங்கள்
மனங்களில் ஈமான் ஒளி நிறைந்து
நல் வழி தன்னை காண வைப்பாய்

எங்கே நிம்மதி ?



விடியலுக்கு முன்னே இறைவனை தொழுது விடு
இதயம் பெரும்  நிம்மதி
உதயம் உன்னை தொடும் வரை திக்ரில் ஈடுபடு
உன் கடமைகளில் உணர்வாய் நிம்மதி