செவ்வாய், 10 செப்டம்பர், 2013

அற்புதம்

அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்
அகிலத்திற்கு அருட்கொடை அல்குர்ஆன்
அருள்நேசர் ஜிப்ரீல்[அலை]அறிவித்தது அல்குர்ஆன்
அண்ணல் நபி ஸல் அமுதவாயால் பிறந்தது அல்குர்ஆன்
அன்பின் மூலம் அல்குர்ஆன்

ஹாஜிகளே வருக

ஹாஜ்ஜத்துடன் பயணித்து
ஹஜ்ஜை நிறைவேற்றி
ஹக்கன் அருள் பெற்ற
ஹாஜிகளே வருக
அஸ்ஸலாமு அலைக்கும்

விதித்தது வரும்

கலங்காதே மனமே
வருந்தாதே தினமே
வருங்காலம் உனதே
இழக்காதே துணிவை
விதித்தது வருமென்று

வாழ்க்கை

எது நடக்கணுமோ அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை பேசித்தான் ஆக வேண்டும் .

திங்கள், 9 செப்டம்பர், 2013

வாழ்க்கை சிறியது


கோதரா !
விடியலுக்கு முன்பே நீ எழுந்து விடு தினம்
விடிய வைப்பவனை  நீ தொழுது விடு – ஈமானை
வெளிச்சத்தை மனதில் ஏற்றி விடு செய்யும்
வேலையை முறையாய் தொடங்கிவிடு
பெற்றோரின் விருப்பம் சார்ந்து இரு – உன்னை

வார்த்தை

நல்ல வார்த்தை இறையருள் பெருக்கும்.

தீய வார்த்தை இறையருள் தடுக்கும் .

நல்ல வார்த்தை இதயத்தை பூஞ்சோலையாக்கும்

தீய வார்த்தை இதயத்தில் நெருப்பைப்பற்ற வைக்கும்.

நல்ல வார்த்தை மனதின் ஒளியாகும் .

தீய வார்த்தை மனதின் நெருப்பாகும் .

வார்த்தை உறவுகளை இணைய வைக்கும் .

வார்த்தை உறவுகளை சிதற வைக்கும் .

மறந்த மனிதன்

இன்னது நடக்குமென்று
எவரும் அறிந்ததில்லை -நான்
சொன்னதே நடக்குமென்று
சொன்னவரும் நிலைத்ததில்லை
வரும் சுகம் அத்தனையும்
வானவன் வகுத்தது தான்